Sunday, November 8, 2015

gurugulam | FLASH NEWS: இடைவிடாத மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எதிரொலி: திருவள்ளூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைபுதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைசென்னையில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைகாஞ்சிபுரத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் உயர்வு:அமைச்சர் கே.சி. வீரமணி | gurugulam

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் தரம் உயர்ந்துள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்தார். ஆம்பூர் இந்து மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடந்த விழாவில் 293 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி அவர் மேலும் பேசியதாவது:

பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி?- மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுரை | gurugulam

தீபாவளி பண்டிகையின்போது பட் டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது தொடர்பாக மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண் ணப்பன் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து மாணவர்கள் உறுதி மொழி எடுக்குமாறும் அறிவுறுத்தி யுள்ளார். உறுதிமொழி விவரம்:
 பட்டாசுகளை கவனமாகவும் விபத்தில்லாமலும் வெடிப்போம்.

கணித மேதை சகுந்தலா தேவி அவர்களது பிறந்தநாள்..! அதிவேக மனிதக் கணினி !

அந்தக் குட்டிப் பெண்ணின் பெயர் தேவி. அவள் அப்பா வித்தியாசமானவர். அவரின் முன்னோர்கள் கோயில் அர்ச்சகராக இருந்தார்கள். அவரோ, சர்க்கஸ் பக்கம் போனார். எண்ணற்ற வித்தைகள், பலவித மேஜிக்குகள் என அசத்தினார். அப்பாவைப் பார்த்து அந்தச் சுட்டிக்கும் ஆர்வம்

gurugulam | அரசு பள்ளிகளில் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் இடமாற்றம்

மாணவர் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளில் பணியாற்றிய பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணிநிரவல் மூலம் மாறுதல் செய்யப்படுகின்றனர். கடந்த 2012 ம் ஆண்டில் அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில், அரசு பள்ளிகளில் 6,7,8 ம் வகுப்புகளுக்கு உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி பாடங்களுக்கு மாநிலம் முழுவதும் 16, 549 பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

மறியல் போராட்டம் ஆசிரியர்கள் திட்டம் | gurugulam

ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்து, தொடர் மறியல் போராட்டத்துக்கு ஆசிரியர்களின் ஒருங்கிணைந்த கூட்டுக்குழு (ஜாக்டோ ) திட்டமிட்டுள்ளது.

gurugulam | இனி செட் மற்றும் நெட் தேர்ச்சி அவசியம்

பிஎச்.டி. தகுதி தொடர்பான தீர்ப்பால் கல்வித் தரம் உயரும்' பிஎச்.டி. தகுதி

தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, உயர் கல்வியின் தரம் உயரவும் ஆராய்ச்சிகள் மேம்படவும் வழி வகுக்கும் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அதோடு, 2009-ஆம் ஆண்டுக்கு முன்னர் பிஎச்.டி. முடித்தவர்கள் "நெட்' அல்லது "செட்' தேர்வு தேர்ச்சி பெறுவது

Monday, October 19, 2015

10ம் வகுப்பு மாணவர்கள் அதிர்ச்சி விடை தெரியாத கேள்விகள்

         பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில், புத்தகத்திலேயே இல்லாத, புதிய கேள்விகள் இடம் பெற்றுள்ளதால், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில், 2014 - 15ம் கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்ற, 10.60 லட்சம் மாணவர்களில், 1.15 லட்சம் பேர், அறிவியல் பாடத்தில், 100க்கு, 100 எடுத்தனர். 2013 - 14ல், 69 ஆயிரம் பேர்; 2012 - 13ல், 38 ஆயிரம் பேரும், 'சென்டம்' எடுத்தனர்.

நவ., 28ல் தலைமை ஆசிரியர்கள் போராட்டம்

       பதவி உயர்வு முரண்பாடுகளை நீக்க வலியுறுத்தி, நவ., 28ம் தேதி, உண்ணாவிரத போராட்டம் நடத்த, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் முடிவு செய்துள்ளது.


அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்குஓவிய போட்டி | gurugulam

         அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 'புனித நதி' என்ற தலைப்பில், ஓவியப் போட்டி நடத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

           இதுகுறித்து, மத்திய நீர்வளம் மற்றும் கங்கை நதி புனரமைப்பு அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவு:நீர் வளத்தை பாதுகாத்தல், நதிகளை சுத்தமாக வைத்திருத்தல் குறித்து, மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஓவியப் போட்டி நடத்தப்பட வேண்டும். நிலத்தடி நீர் மாசுபடுதல், அதன் அபாயங்கள், தடுத்தல் மற்றும் புனித நதி போன்ற தலைப்புகளில் நடத்தப்படும் போட்டியில், தேசிய அளவில், மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, விருதுகள் வழங்கப்படும்.


இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.இதன்படி, அரசு, அரசு உதவி பெறும்மற்றும் தனியார் பள்ளிகளில், 6, 7 மற்றும், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு,ஓவியப் போட்டிகளை, 25ம் தேதிக்குள் நடத்தி முடிக்க, தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மொகரம் அரசு விடுமுறை அக்டோபர் 24-ம் தேதிக்கு (சனி கிழமைக்கு) மாற்றம் - அக்டோபர் 23 ம் தேதி தேதி வெள்ளி கிழமை வேலைநாள்,

             
அக்டோபர் 23-ம் தேதியை மொகரம் விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்திருந்தது. மொகரம் மாதத்தின் முதல் நாளில் பிறைதெரிந்தால் 10-வது நாளில் மொகரம் திருநாள் கடைப்பிடிக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு முதல் நாளான அக்டோபர் 13-ம் தேதி பிறை சரியாகத் தெரியவில்லை. மறுநாள் தெரிந்தது.

நவ.1 முதல் 91 அங்காடிகளில் கிலோ ரூ.110-க்கு துவரம் பருப்பு விற்பனை: தமிழக அரசு


        தமிழகம் முழுவதும் நவம்பர் 1-ம் தேதி முதல் 91 விற்பனை அங்காடிகளில் கிலோ 110 ரூபாய் என்ற விலையில் துவரம் பருப்பு விற்பனை செய்யப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

gurugulam ஆசிரியர்களுக்கு ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்ய உத்தரவு


8.10.2015 அன்று நடைபெற்ற வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்ய உத்தரவு -திருவாரூர் மாவட்ட CEO செயல்முறைகள்

tnpsc guru 3 நாள் விடுமுறை: மின் கட்டணம்கட்டுவதில் சிக்கல்

தொடர்ந்து, மூன்று நாட்கள் அரசு விடுமுறையாக வருவதால், 'மின் கட்டணம் செலுத்த, கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


gurugulam பள்ளிகளில் நூடுலஸ்,சிப்ஸ் விற்பனைக்கு வருகிறது தடை


     'நுாடுல்ஸ், சிப்ஸ்' போன்ற, 'ஜங்க் புட்' எனப்படும், சத்தற்ற உணவுப் பொருட்களை, பள்ளிகள் மற்றும் அவற்றின் சுற்றுப்புறங்களில் விற்பதற்கு தடை விதிக்க, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் திட்டமிட்டுள்ளது. இக்கட்டுப்பாடு, விரைவில் அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

kalviseithi இந்திய மாணவர்களின் தொழில்நுட்பத்தை திருடிய ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.1400 கோடி அபராதம்.


      இந்திய ஆராய்ச்சியாளர்கள் உள்பட 4 பேர் கொண்ட குழுவின் தொழில்நுட்பத்தை அனுமதியின்றி திருடி பயன்படுத்தியதற்காக ஆப்பிள் நிறுவனம் ஆயிரத்து நானூறு கோடி ரூபாயை இழப்பீடு வழங்க வேண்டுமென அமெரிக்க கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு சரி செய்ய அரசு திட்டம்!!


      போராட்டம் எதிரொலியாக, ஆறாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி, ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

Friday, October 16, 2015

padasalai 4 திட்டங்களுக்கு ஆதார் அட்டையை பயன்படுத்த அனுமதித்து உச்சநீதிமன்றம்

முதியோர் ஓய்வூதியம், 100 நாள் வேலைவாய்ப்பு உள்ளிட்ட 4 சமூக திட்டங்களுக்கு ஆதார் அட்டையை விருப்பத்தின் பேரில் பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
  

tnkalvi ஒரு அரசுப் பள்ளி ஆசிரியரின் கனவு!

 பல வருடங்களாக வண்ணம் தீட்டப்படாத அழுக்கான கட்டிடங்கள்,காய்ந்த சருகுகள் ,புல் ,சிறிய புதர்கள் நிரம்பிய வளாகங்கள், பராமரிக்கப்படாத மாணவர் கழிப்பறைகள்....இவை பெரும்பாலான அரசுப்பள்ளிகளின் இன்றைய அடையாளங்கள். நகர்ப்பகுதியில் உள்ள ஒரு பெண்கள் பள்ளியில் படிக்கும் மாணவியிடம் பேசியபோது அவர் சொன்ன கருத்துக்கள் இவை..

kalviseithi மாணவர்களுக்கு சான்றுகள் வழங்க பள்ளிகள் ஒருங்கிணைப்பு மையம்

மாணவர்களுக்கான சான்றுகள் வழங்க, சில பள்ளிகளை ஒருங்கிணைத்து தனிமையங்கள் அமைத்து, 'ஆன்-லைனில்'சான்றுகள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

group 2 exam குரூப் 2 தொகுதியில் காலியாகவுள்ள 22 பணியிடங்களுக்கு கலந்தாய்வு

குரூப் 2 தொகுதியில் காலியாகவுள்ள 22 பணியிடங்களுக்கு அக்டோபர் 19, 20 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.இதுகுறித்து, தேர்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

ஆதார் அட்டை முழு முக்கியம் பெறுகிறது.

ஆதார் அட்டை அவசியம் குறித்து சுப்ரீம் கோர்ட் இன்று முக்கிய உத்தரவுபிறப்பித்துள்ளது. இதன்படி மேலும் மத்திய அரசின் 4 திட்டங்களுக்கு ஆதார் அட்டை அவசியமாகிறது.